தமன்னா யாருடன் டேடிங் செல்ல விரும்புகிறார் தெரியுமா..?

87

தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலை டேட் செய்ய விரும்புகிறார். தான் யாரையும் காதலிக்கவில்லை என்று தமன்னா அடிக்கடி கூறி வருகிறார்.

இருப்பினும் அவரின் காதல், திருமணம் பற்றி ஏதாவது செய்தி வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அவரே தன் ஆசை குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

விக்கி கவுஷல் யூரி படம் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலுடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக தமன்னா தெரிவித்துள்ளார்.

விக்கி தனது காதலியை அண்மையில் தான் பிரிந்தார். அவரின் காதல் முறிய பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் காரணம் என்று கூறப்படுகிறது.

கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியை எப்பொழுதுமே காதலிக்கவில்லை என்று தமன்னா அண்மையில் தெரிவித்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து விளம்பர படம் ஒன்றில் நடித்ததால் அந்த பேச்சு கிளம்பியது.

விளம்பர படத்தில் நடித்தபோதே கோஹ்லியுடன் 4 வார்த்தைதான் பேசினேன். அதன் பிறகு அவருடன் டச்சில் இல்லை என்றார் தமன்னா.

தமன்னா அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் ஒருவரை காதலிக்கிறார் என்றும் அவரை இந்த ஆண்டு திருமணம் செய்யப் போகிறார் என்றும் கூறப்பட்டது. நான் எந்த டாக்டரையும் காதலிக்கவில்லை என்று தமன்னா விளக்கம் அளித்தார்.

தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் தமன்னா பாலிவுட் நடிகருடன் டேட்டிங் செல்ல விரும்புகிறார். முன்னதாக பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்காக மட்டும் லிப் டூ லிப் முத்தக் கொள்கையை தளர்த்த தயார் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here