போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள்

89

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டம் 2019ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென நிதி எதிர்ப்பு தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் இந்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் மாவட்டச் செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு போராட்டக்காரர்கள் இதன்போது எதிர்ப்பு வெளியிட்டனர்.

ஆரப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ‘நாட்டில் ஜனநாயகமாம் தொழிலுரிமை கிடையாதாம் இதுவா நல்லாட்சி’ மற்றும் ‘30000 ஆசிரியர் வெற்றிடமிருந்தும் பட்டதாரி நியமனம் எங்கே?’போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here