மழையுடன் கூடிய சீரான வானிலை..!

24

சீரன காலநிலை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனினும், சில மாவட்டங்களான இரத்தினபுரி, மொனராகலை மற்றும் மாத்தறை போன்ற இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படுமென மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது.அப் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கையாக மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சீரான வானிலை நிலவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும்.

பொத்துவிலிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்து வீசக்கூடும்
மணித்தியாலத்துக்கு 10-20 கிலோ மீற்றர் வரை கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here