O/L பரீட்சையில் விழ்ச்சி அதிர்ச்சியில் மாணவர்கள் !

44

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்று அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி நாட்டிலுள்ள 99 கல்வி வலயங்களில் கொழும்பு கல்வி வலயத்திலேயே அனைத்து பாடங்களிலும் சித்தியெய்த தவறிய மாணவர்கள் அதிகளவில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி கொழும்பு கல்வி வலயத்தில் 285 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியெய்தத் தவறியதாக தெரிவிக்கப்படுகிறது.அதற்கு அடுத்தபடியாக நீர்கொழும்பு கல்வி வலயத்தில் 215 பேரும்,களுத்துறை கல்வி வலயத்தில் 192 பேம்,களனி கல்வி வலயத்தில் 145 பேரும்,கம்பகா கல்வி வலயத்தில் 162 பேரும்,இரத்தினபுரி கல்வி வலயத்தில் 117 வேரும் இவ்வாறு அனைத்து பாடங்களிலும் சித்தியெய்தத் தவறியுள்ளனர்.

இதேவேளை 99 கல்வி வலயத்திலும் 5917 மாணவர்கள் ஆறு பாடங்களுக்கு மேல் சித்திபெற தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஏழு வருட காலப்பகுதியில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் குறைந்தளவான மாணவர்கள் அதாவது இரண்டு வீதமான மாணவர்கள் இவ்வருடம் சித்தியெய்தத் தவறியுள்ளதாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here