யாழில் இரவில் நடந்த சோகம் !

31

மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் யாழ் வடமராட்சி – கொடிகாமம் வீதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று இரவு 7.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் படுகாயமடைந்ததுடன் பின்னால் பயணித்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் துன்னாலை வடக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் கஜீபன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நெல்லியடிப் பொலிஸார் இவ் விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here