ஆசிரியர் தகுதித் தேர்வு ஆரம்பம் !

52

ஏப்ரல் 12 ஆம் தேதி வரை ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

ஆசிரியர் தகுதி தேர்வான டெட் (TET) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மார்ச் 15 ஆம் தேதி துவங்கியது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முயற்சித்தவர்கள் பலர் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

ஒடிபி என்னும் ஒருமுறை கடவுச்சொல்லும் மின்னஞ்சலுக்கு வரவில்லை என பரவலாக விண்ணப்பதாரர்கள் தரப்பில் குறை சொல்லப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக, டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் விண்ணப்பதாரர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here