திடீர் தீவிபத்தில் நாசமான குடியிருப்பு!

54

கந்தப்பளை நகரில் உள்ள இறைச்சிகடையிலும் அதன் அருகாமையில் இருந்த குடியிருப்பிலும் திடீர் தீவிபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் மேலும் இச்சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

குடியிருப்பும் முற்றாக எறிந்து சாம்பராகியுள்ளதாகவும் குடியிருப்பில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் எரிந்து சாம்ராகியுள்ளதாகவும் இத் தீவிபத்தில் குடியிருப்பில் இருந்த எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

நுவரெலியா பிரதேசசபையின் தலைவர் வேலுயோகராஜ் தெரிவிக்கையில், இதேவேளை குறித்த பகுதியில் ஏற்பட்ட தீயினை கந்தப்பளை பொலிஸார், பொதுமக்கள் மற்றும் நுவரெலியா பிரதேச சபையினர் இணைந்து கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தப்பளை பொலிஸார் மேற்கொள்வதுடன் இதேவேளை தீ பற்றியமைக்கான காரணம் இதுவரையிலும் கண்டறிப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here