கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட மர்மநபர்கள் !

45
Autosave-File vom d-lab2/3 der AgfaPhoto GmbH

பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்லந்த மஹலந்த மற்றும் உஸ்ஸெல்ல ஆகிய பிரதேசங்களில் சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட இரு சந்தேநகபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொஸ்லந்த பொலிஸாருக்கு நேற்று வியாழக்கிழமை கிடைத்த தகவலையடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்காலை பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 71 வயதுடைய நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களை இன்று வெள்ளிக்கிழமை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத் தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here