சாவகச்சேரியை வந்தடைந்த 25 வருட சடலம்!

40

காலமான யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த நபர் ஒருவரின் சடலம் , சுமார் 25 வருடங்களுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் சாவகச்சேரிக்கு இன்று அதிகாலை இத்தாலியில் இருந்து எடுத்துவரப்பட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் காலமான இவர் நோய்வாய்ப்பட்ட ஸ்றீபன் ஆவார். 1994 ம் ஆண்டு மே மாதம் 24 ம் திகதி அவருடைய 49 வது வயதில் இத்தாலியில் மரணமடைந்துள்ளார்.

இலங்கையில் யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இவர் இறந்ததினால், இவரின் உடலை இலங்கைக்கு கொண்டுவரமுடியாதிருந்தது.

எனினும் யுத்தம் எப்போது முடிவடையும் என்று தெரியாத இத்தாலியில் இருந்த இவரது உறவினர்கள் சடலத்தை 25 ஆண்டுகளுக்கு பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை எடுத்தனர்.

நாட்டில் யுத்தம் நிறைவுக்கு வந்தாலும் 25 வருடங்கள் நிறைவடையாமல் உடலினை பொறுப்பேற்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இதனால் இத்தாலிக்குச் சென்று இறந்தவரின் மனைவி உடலினை பார்வையிட்டு வந்துள்ளார்.

இறந்தவரின் உடல் 25 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் இன்று அதிகாலை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்பட்டு இறந்தவரின் உடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here