கொழும்பில் திடீர் தீவிபத்து நடந்தது என்ன?

507

நேற்றயதினம் சனிக்கிழமை திடீர் என்று கொழும்பு புளுமென்டல் பகுதியில் உள்ள குப்பை மேட்டிலும் மற்றும் சொய்சாபுர தனியார் நிறுவனத்திலும் திடீர் என்று தீ பரவத்துடங்கியது.

இத்தீப்பரவலை மேற்கு கடற்படையின் தீயணைப்பு படையினரும், இராணுவத்தின் தீயணைப்பு படையினரும் மற்றும் கொழும்பு நகரசபை தீயணைப்பு படையினரும், கொழும்பு கரையோர பிரிவின் தீயணைப்பு படையினரும் ஒருங்கினைந்து தீப்பரவலை கட்டுப்படுத்தினர்.

அத்துடன் சொய்சா புரத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றில் நேற்றைய தினம் சனிக்கிழமை கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இரசாயன களஞ்சிய அறையில் தீப்பரவல் ஏற்பட்டது

அதை கல்கிஸ்ஸ பொலிஸார் மொரட்டுவை , தெஹிவலை , கொழும்பு பகுதியின் தீயணைப்பு படையினருடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டக்குள் கொண்டுவந்துள்ளனர்.

பொலிஸார் இத்தீப்பரவலுக்கன காரணத்தை கண்டறிய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here