ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு நடந்த கொடூர சம்பவம்!

348

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில், நபரொருவர், கையில் வைத்திருந்த குறடால் மனைவி மீது தாக்க முற்பட்டபோது, அது தவறி மனைவியின்.

கையில் இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீது பட்டதில், குழந்தை படுகாயமடைந்த நிலையில், மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை குறித்தக் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளது. இதனையடுத்து குறித்த குழந்தையின் தந்தையை, கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில், கடுக்காய்முனை அருள்நேசபுரம் அம்பலாந்துறையைச் சேர்ந்த, திலீபன் யதுநிசா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையே, உயிரிழந்துள்ளது

இதுபற்றி தெரிய வருவதாவது,

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெரியதம்பி திலீபன், சம்பவ தினமான கடந்த 4ஆம் திகதி மாலை மனைவியுடன் ஏற்பட்ட சண்டையையடுத்து வீட்டில் இருந்த குறடு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு.

மனைவியை தாக்க முற்பட்டபோது, மனைவியின் கையிலிருந்த குழந்தையின் தலையின் மீது, குறடு பட்டதையடுத்து குழந்தை படுகாயமடைந்ததையடுத்துள்ளது.

இந்நிலையில், குழந்தையின் தந்தை தப்பி ஓடியுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குழந்தையை மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தபோதும், சிகிச்சைப் பலனின்றி நேற்று திங்கட்கிழமை (08.04.2019) பகல் குழந்தை உயிரிழந்துள்ளது.

இதேவேளை தலைமறைவாகிய தந்தையை பொலிசார் நேற்று திங்கட்கிழமை (08.04.2019) கைது செய்துள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணையை கொக்கட்டிச் சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றமையும் குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here