ரஸல் மற்றும் சாவ்லா ஜோடியின் அதிரடியான ஆட்டத்தினால் மீண்டெழுந்த கொல்கத்தா அணி சென்னைக்கு வெற்றி இலக்கு 108 ஓட்டங்கள்..

271
ipl

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரஸலின் அரைசதத்தின் உதவியுடன் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிறைவில் 108 ஓட்டங்களை  குவித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், தினேஷ் கார்த்திக்  தல‍ைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிக்கிடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆரம்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்ய, கொல்கத்தா அணி ஆடுகளம் நுழைந்தது.

எனினும் சென்னை அணியின் பந்து வீச்சாளர்களின் பந்துகளுக்கு ஈடுகொடுத்து துடுப்பெடுத்தாட முடியாதமையினால் கொல்கத்தா அணியின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து வரிசையாக சரிய ஆரம்பித்தது.

கிறிஸ் லின் டக்கவுட் முறையிலும், சுனில் நரேன் 6 ஓட்டத்துடனும், ராணா டக்கவுட் முறையிலும், உத்தப்பா 11 ஓட்டத்துடனும், தினேஷ் கார்த்திக் 19 ஓட்டத்துடனும் மற்றும் சுப்மான் கில் 9 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

இதனால் கொல்கத்தா அணி 10.1 ஓவர்களில் 47 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டை இழந்தது. இதையடுத்து 7 ஆவது விக்கெட்டுக்காக ரஸல் மற்றும் சாவ்லா ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட ஆரம்பிக்க கொல்கத்தா அணி 15 ஓவர்களின் முடிவில் 75 ஓட்டங்களை குவித்தது (ரஸல் 20, சாவ்லா 8).

எனினும் சாவ்லா 15.3 ஆவது ஓவரில் ஹர்பஜன் சிங்கின் சுழலில் சிக்கி 8 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து வந்த குல்தீப் யாதவ்வும் அடுத்த பந்தில் ரன் அவுட் ஆனார்.

9 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய கிருஷ்ணாவும் ஜடேஜாவின் பந்தில் ஹர்பஜன் சிங்கிடம் பிடிகொடுத்து டக்கவுட் ஆனானர். இதனால் கொல்காத்தா அணி 79 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்தது.

தொடர்ந்து இறுதி விக்கெட்டுக்காக ஹாரி கர்னியுடன் ரஸல் கைகோர்த்தாட கொல்காத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 108 ஓட்டங்களை குவித்தது.

ஆடுகளத்தில் ரஸல் 50 ஓட்டத்துடனும், ஹாரி கர்னி ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் சென்னைஅணி சார்பில் சாகர் 3 விக்கெட்டுக்களையும் ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாகீர் தலா 2 விக்கெட்டுக்களையும், ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here