குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்த தொழிலாளர்கள்

31

கோவை அருகே குடும்ப பிரச்சனையால்  2 தொழிலாளர்கள் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுகுறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரமடை அருகே உள்ள தேவனாம்புரத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 48).

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனை  குடும்பத்தினர் கண்டித்ததால் மனவேதனை அடைந்த அவர் வி‌ஷத்தை குடித்து சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து குறித்த  நபரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குறித்த  நபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து காரமடை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை செட்டிப்பாளையம் அருகே உள்ள ஒக்கிலிபாளையத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம் (48). கூலித் தொழிலாளி.

சம்பவத்தன்று இவர் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட் டுள்ளது. இதில் மனவேதனை அடைந்த தர்மலிங்கம் வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செட்டிப்பாளையம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தர்மலிங்கத்தின் உடலை மீட்டு கோவை அரசு வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here