போராளிகளின்செயற்பாடு – மீண்டும் வழமைக்குத் திரும்பியது சமூகவலைத்தளம்

21

பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாக விதிக்கபட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளார்.

நீர்கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து இவ்வாறு சமூகவலைத்தளங்கள் தற்காலிகமாக மூடக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்தும் இவ்வாறு சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டால் நிரந்தரமாக இலங்கைக்கான தமது சேவையை நிறுத்த வேண்டி ஏற்படும் என சமூக ஊடக நிறுவனங்கள் முன்னரே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here