அதிக வெப்பத்தினால் பற்றி எரியும் காடுகள்…!

27

தற்போது நிலவும் கடும் வெப்பநிலையுடன் பல பகுதிகளில் உள்ள வனங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளன.

பெல்பித்திகம வனப்பகுதியில் நேற்றைய தினம் இவ்வாறு ஏற்பட்ட தீப்பரவலை காவல்துறையினர், பிரதேசவாசிகள் மற்றும் குருநாகல் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து அணைத்துள்ளனர்.

தீயினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பு இதனால் சேதமடைந்துள்ளது.

இதேவேளை புத்தல – பதுகல்லேன வனப்பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலை அணைப்பதற்காக காவல்துறையினர், பிரதேசவாசிகள் மற்றும் இராணுவ வீரர்களுடன், வன பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும் தீ தொடர்ந்து பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here