யாரு இந்த கண்ணம்மா? – ஏன் கருப்புக்கு முக்கியத்துவம்!

29

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியல் கதையை விழிப்புணர்வை தூண்டுவது போலத்தான் நகர்த்திக்கிட்டு போறாங்க. கண்ணம்மா ரொம்ப கருப்பு பொண்ணு. அம்மா இறந்துவிட, இரண்டாவது திருமணம் மூலம் பிறந்த பொண்ணுதான் அஞ்சலி.

அவள் அழகானவள்னு சீரியல்ல காமிச்சு இருக்காங்க. அவள் அழகில் அகிலன் மயங்கி அம்மாகிட்ட சம்மதமும் வாங்கிடறான். கண்ணம்மா குடும்பம் ஏழைன்னாலும், பொண்ணு அழகா இருக்குன்னு அகிலன் அம்மா சம்மதம் சொல்லிடறாங்க.

அகிலனின் அண்ணன் டாக்டர் பாரதிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. அவன் கண்ணம்மா கண்தானம் செய்ய வந்த போது, உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்குங்கன்னு சொல்லி அவளை சிலிர்க்க வைத்தவன்.இந்த பாரதி மேல்தான் காதல் வந்துருது தம்பி அகிலனுக்கு நிச்சயமாகி இருக்கும் அஞ்சலிக்கு.

கண்ணம்மா மீது ஒருதலை காதலில் இருக்கான் அவங்க வீட்டு எடுபிடி தாய் மாமன் கணபதி. இவன்மேல் ஒரு தலை காதலில் இருக்கா பாரதியின் வீட்டில் அக்கான்னு இருக்கும் எடுபிடி அறிவுமதி.அவள் போன் செய்து, ஐ லவ் யூ ன்னு சொல்ல, ஐயோ… புரிஞ்சுக்க மாட்டேன்கிறாளே .. நான் கண்ணம்மாவுக்கு துரோகம் செய்ய மட்டேன்னு புலம்பறான்.

கண்ணம்மா போனுக்கு ரீசார்ஜ் கார்டு வாங்கி, காரின் மேல் வச்சு தேச்சுகிட்டு இருக்க, அங்கிருந்து ஒடி வர்றான் பாரதி. என்னங்க.. என்ன பன்றீங்கன்னு கேட்க.. இல்லை.. 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் கார்டு வாங்கினேன்.

அதை இப்படி வச்சு தேய்ச்சேன்னு மறுபடியும் காரின் மேல் வைக்க… ஐயோ அப்படி செய்யாதீங்க.. கார்ல ஸ்க்ராட்ச் பாருங்க. இதை எடுக்கவே லட்சம் ரூபாய் செலவாகும்னு சொல்றான்.அவ்வளவா என்று கண்ணம்மா வாய் பிளக்க.. சும்மா சொன்னேங்கன்னு சொல்றான்,

இதென்னங்கன்னு காரின் மேல் இருந்த கூடையை பார்த்து பாரதி கேட்க, காய்கறி கூடைங்க..இதை இங்க வச்சுட்டுதான் இந்த கார்டை இப்படி என்று மறுபடியும் காரில் தேய்ச்சு காமிக்கப் போக.. ஐயோ போதும்ங்க.. ஆமா, இதென்ன காரா, காய்கறி டேபிளா.. எவ்வளோ ஆசைப்பட்டு வாங்கின காஸ்ட்லி கார் தெரியுமா இதுன்னு மறுபடியும் விளையாட்டா கோபம் காமிக்கறான்.

சரி காரில் ஏறுங்கன்னு பாரதி சொல்ல, நான் ஏன் உங்க கார்ல ஏறணும்னு கேட்கறா.. நானும் உங்க வீட்டுக்குத்தான் போறேன்.. இறக்கி விட்டுடறேன் வாங்கன்னு சொல்றான். இல்லைங்க வேணாம்… நீங்க போங்க.. நான்நடந்து வரேன்னு சொல்றா கண்ணம்மா. இதோ பாருங்க என்னோட ஆர்டர்..

நீங்க காரில் இருங்கன்னு அதட்ட அவள் பயந்து காரில் ஏறிக்கறா.இதுல ஒரு பியூட்டி என்னன்னா பாரதிக்கு கண்ணம்மா அஞ்சலி வீட்டு வேலைக்காரின்னுதான் இதுவரைக்கும் தெரியும். இப்போ பாருங்க கருப்புக்கு எவ்ளோ மவுசுன்னு.. விழிப்புணர்வு போலத்தான் பாரதி கண்ணம்மா சீரியல் இருக்கு பாராட்டலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here